2026 மே 07, வியாழக்கிழமை

'கல்வி மேம்பாட்டை அடிப்படையாக கொண்டு கல்லூரிகள் உருவாக்கப்படவுள்ளன'

Kogilavani   / 2013 ஜூன் 12 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

"நாட்டில் பலக்லைக்கழகம் செல்லத் தவறுகின்ற மாணவர்களுக்கு ஜனாதிபதியின் ஆலோசனையின்பேரில் மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இவ்வாறான கல்லூரிகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளன" என்று இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

காத்தான்குடியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலமாக்களுக்கான மலிக் அப்துல்லாஹ் கல்லூரிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

"ஆண்டுதோறும் முதலாம் ஆண்டுக்கு செல்லும் மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழகம் செல்வதில்லை.

பல்கலைக்கழகம் செல்லத்தவறுகின்ற மாணவர்களின் கல்வி மேம்பாட்டை அடிப்படையாக கொண்டுதான் இந்த கல்லூரிகள் உருவாக்கப்படவுள்ளன.

இதன் அடிப்படையில் இங்கு ஆரம்பிக்கப்படவுள்ள மலிக் அப்துல்லாஹ் கல்லூரியானது கிழக்கு மாகாண மாணவர்களுக்கும் புத்தளம், சிலாபம், அம்பாந்தோட்ட உள்ளிட்ட இலங்கையின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த மாணவர்களின் கல்வி அறிவை போதிக்கும் மிகப்பெரிய தொழில்நுட்ப கல்லூரியாக திகழ வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .