2026 மே 07, வியாழக்கிழமை

திருமணத்தை தடுத்து நிறுத்திய பட்டதாரி

Kogilavani   / 2013 ஜூன் 12 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

திருமணத்திற்கான ஏற்பாடுகளை தடுத்து நிறுத்திய பட்டதாரியொருவர் திருமணம் செய்துக்கொள்வதற்கு தயாராகவிருந்த மாணவியை மீண்டும் பாடசாலைக்கு அனுப்பிவைத்த சம்பவமொன்று வெருகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கள உத்தியோகத்தரான பட்டதாரி உத்தியோகஸ்தர் ஒருவரே இவ்வாறு
திருமணத்திற்கான ஏற்பாடுகளை தடுத்துநிறுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஈச்சிலம்பற்றுப் பாடசாலையொன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியான 15 வயது சிறுமிக்கும் 18 வயதான இளைஞனுக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த திருமண ஏற்பாடுகள் தொடர்பில் அப்பிரதேச சிறுவர் பாதுகாப்புக் குழுவிற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனையறிந்த பிரதேச செயலக திட்டமிடல் கிளையின் பட்டதாரி உத்தியோகத்தர் ஒருவர் உடனடியாக சிறுமியின் வீட்டுக்கும் இளைஞனின் வீட்டுக்கும் சென்று அவ்விருவரின் பெற்றோர்களையும் சந்தித்து கலந்துரையாடியதுடன் சிறுமிக்கும் குறித்த இளைஞனுக்கும் சிறுவயதில் திருமணம் செய்வதனால் ஏற்பாடும் பாதிப்புகள் மற்றும் சமூக உணர்வுகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து பெற்றோரும் சம்பந்தப்பட்ட இளைஞனும் தங்கள் மீதான சமூகப் பொறுப்புக்களை உணர்ந்துகொண்டதுடன் சிறுமியை மீண்டும் கல்வியை தொடர்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்கு உறுதியளித்துள்ளனர்.

அதனடிப்படையில் சிறுமி மீண்டும் தனது கல்வியைத் தொடர்வதற்காக பாடசாலைக்குச் செல்வதுடன் குறித்த இளைஞன் மத்திய கிழக்குக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் செல்ல உத்தேசித்துள்ளார்.

இந்த விடயத்தில் அதீத அக்கறை எடுத்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பட்டதாரி கள உத்தியோகத்தரை சிறுவர் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் பாராட்டியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .