2026 மே 07, வியாழக்கிழமை

போஷாக்கு மேம்பாட்டு நிறையுணவு செயற்திட்டம்

Kogilavani   / 2013 ஜூன் 13 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மந்த போஷாக்குள்ள குழந்தைகளினதும் தாய்மாரினதும் நலன்கருதி சுகாதார போஷாக்கு மேம்பாட்டுத் திட்டமொன்றை வேர்ள்ட் விஷன் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனம் அமுல்படுத்தி வருகின்றது.

வெருகல் பிரதேச செயலகம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பனவற்றின் ஒத்துழைப்புடனேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

'பிரதேச புனர்வாழ்வு புனரமைப்புத் திட்டத்தின் கீழ் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வறுமை நிலைக்குட்பட்ட ஐந்து கிராமங்களில் போஷாக்கு நிலைமையை மேம்படுத்தும் 6 மாதகாலத் திட்டத்திற்காக சமூகநல ஊக்குவிப்பாளர்களும் சுகாதார நலத் தொண்டர்களும் பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்' என வேர்ல்ட் விஷன் திட்ட இணைப்பாளர் கே. லிங்கராஜா தெரிவித்தார்.

ஈச்சிலம்பற்று இண்பகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமான இருநாள் பயிற்சி நெறியினை வேர்ள்ட் விஷன் நிறுவனத்தின் கிழக்கு மாகாண சுகாதார போஷாக்கு இணைப்பாளர் பி.லோகிதராஜா ஆரம்பித்து வைத்தார்.

மாவடிச்சேனை, பூநகர், இலங்கைத்துறை, வாழைத்தோட்டம், வட்டவன் ஆகிய கிராமங்களில் பணிபுரிவதற்காக 30 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு செய்முறை ஆற்றல் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

பயிற்சி நெறியின் பின்னர் பயிற்சியாளர்கள் கிராமம்தோறும் சென்று போஷாக்கு மற்றும் சத்துணவு தொடர்பான செயன்முறைப் பிரயோகத்தில் ஈடுபடுவர்.

பிரதேசத்திலுள்ள மந்த போஷாக்கு உடைய குழந்தைகளின் நலனைப் பேணுவதற்காக குடும்ப நல சேவையாளர்களின் ஒத்துழைப்புடன் வீட்டுத்தோட்ட சத்துணவுப் பயிர்ச்செய்கை ஊக்குவிப்பிலும் இவர்கள் இணைந்து ஈடுபடுவார்கள் என்றும் வேர்ல்ட் விஷன் திட்ட இணைப்பாளர் கே.லிங்கராஜா மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .