2026 மே 07, வியாழக்கிழமை

விவசாயிகளின் குறைபாடுகளை ஆராயும் விசேட கூட்டம்

Kogilavani   / 2013 ஜூன் 13 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.எம்.எம்.முர்ஷித்


வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையப் பிரதேசத்திற்குட்பட்ட விவசாயிகளின் குறைபாடுகளை ஆராயும் விசேட கூட்டம் இன்று வாழைச்சேனை பிரதேசசெயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின்; தலைமையில் இடம்பெற்ற இவ்விசேட கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் என்.சிவலிங்கம், பிரதேச செயலக உதவித்திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், வாழைச்சேனை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.ரஷீத், கமநல நிலைய விவசாய போதனாசிரியர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், 'விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளான யானைகளினால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் அழிவுகள், நீர் பிரச்சினை, அறுவடை காலங்களில் இயற்கையினால் ஏற்படும் அழிவுகள் தொடர்பான பிரச்சனைகள் என்பன முன்வைக்கப்பட்டதுடன் அதற்கான தீர்வினையும் பெற்றுத்தருமாறு விவசாய பிரிதிநிதிகளால் பிரதி அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேற்படி பிரச்சினைகளுக்கான தீர்வுகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மிகவிரைவில் பெற்றுத் தருவதாகவும் பிரதிஅமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .