2026 மே 09, சனிக்கிழமை

dd

'காந்திசிலை உடைப்பு போன்று இந்து ஆலய விடயத்தினை விட்டுவிட முடியாது'

Kogilavani   / 2013 ஜூன் 15 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


'மட்டக்களப்பில் காந்திசிலை, விபுலானந்தர் சிலை உட்பட பல சிலைகள் உடைக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை போன்று அண்மையில் உடைக்கப்பட்ட இந்து ஆலயங்கள் விடயத்தினை விட்டுவிட முடியாது' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

மட்டக்களபபில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் இந்து ஆலயங்களில் சிலை உடைப்பு சம்வங்கள் மற்றும் ஏனைய சம்பவங்கள்; தொடர்பில் விளக்கமளிப்பதற்கான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில்,  மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதேசத்தில் அமைக்கப்படவிருந்த புத்தர் சிலை நிர்மாணிப்பு சம்மந்தமான நடவடிக்கைகள், இந்நிய வீட்டுத்திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்படுகின்ற அத்துமீறிய குடியேற்றங்கள்,  நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மத வழிபாட்டுத் தலங்கள் உடைத்து களவாடப்பட்டமை, உகந்தை முருகன் ஆலய எல்லையில் பௌத்த விகாரை அமைக்க திட்டம் மேற்கொள்ளப்படுகின்றமை போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .