
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
வேல்ட் விஷன் பிராந்திய அபிவிருத்தி திட்டத்தின் கீழ், வாகரை பிரதேசத்தில் கொய்க்கா (KOICA) கொரியநிதி அனுசரணையுடன் இயற்கை முறையிலான விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான திட்டத்தை நடைமுறைபடுத்தி வருகின்றது.
அதன் அங்கமாக வேல்ட் விஷன் கொய்க்கா கொரியாவுடன் சேர்ந்து வாகரை பிரதேசத்தில் உள்ள புளியன்குளத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான திட்டம் கடந்த வியாழனன்று வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிதிகளாக வாகரை பிரதேச செயலக திட்டமிடற் பணிப்பாளார் ஆர். ஜதீஸ்குமார், வேல்ட் விஷன் நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் ஜே. ரமேஸ்குமார், வேல்ட் விஷன் பிராந்திய அபிவிருத்தி திட்ட முகாமையாளர் பொனி வின்சன்ற் கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள் அத்தோடு சக ஊழியர்களும் பிரதேச விவசாயிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
