2026 மே 09, சனிக்கிழமை

சாரதி மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 16 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியின் ஏறாவூர் சாலையின் பஸ் வண்டிச் சாரதி ஒருவர் நேற்று சனிக்கிழமை மாலை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

எம்.ஐ.எம்.லாபீர் (வயது 45) என்ற சாரதியே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நிலையில்,  வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதியை இலக்கு வைத்து சோடா போத்தலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது, மேலும் 2 பயணிகள் சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும் அறிய முடிகின்றது.

வாழைச்சேனையிலிருந்து ஏறாவூர் நோக்கி பஸ் வண்டியில்  சென்றுகொண்டிருந்தபோது, கிண்ணயடிச் சந்தியில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் பஸ் ஊழியர்களே இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கலாமென ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இலங்கை போக்குவரத்துச் சாலை ஊழியர்களுக்கும் இடையிலுள்ள போட்டி மனப்பான்மை காரணமாகவே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .