2026 மே 09, சனிக்கிழமை

dd

'வாழ்க்கைத்திறனை அபிவிருத்தி செய்தல்' கருத்தரங்கு

Kogilavani   / 2013 ஜூன் 16 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


'வாழ்க்கைத்திறனை அபிவிருத்தி செய்தலும் சுகாதாரம் தொடர்பான கலந்துரையாடலும்' எனும் தொனிப்பொருளில்  வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கான ஒரு நாள் பயிற்சிக் கருத்தரங்கு நேற்று சனிக்கிழமை வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சினால் பிரதேச செயலகம் தோரும் இளைஞர் யுவதிகளின் எதிர்கால திட்டத்தை முன்னேற்றும் நோக்கில் இப்பயிற்சிக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையிலேயே இக்கருத்தரங்கும் நடைபெற்றது.

வாழைச்சேனை பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.நவநிதனி தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எஸ்.தட்சனாமூர்த்தி, வவுணதீவு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரி ஏ.சி.ஏ.அஸீஸ் ஆகியோர் வளவாளர்கலாக கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கினர்.

வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 175 இளைஞர் யுவதிகள் இக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .