2026 மே 09, சனிக்கிழமை

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்: அறுவர் காயம்

Kogilavani   / 2013 ஜூன் 16 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவு, சுங்காங்கேணி கிராமத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஆறுபேர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவிர தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுங்காங்கேணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தை  முன்னிட்டு காலையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுகொண்டிருந்த அதேவேளை,  சுங்காங்கேணி மெதடிஸ் திருச்சபையில் ஒலிபெருக்கியில் ஜெப வழிபாடும் இடம்பெற்றுக் கொண்டிருந்தது.

இந்நிலையில், மெதடிஸ் திருச்சபையில் ஒலித்துகொண்டிருந்த ஒலிபெருக்கியை  நிறுத்துமாறு கூறி இந்து ஆலயத்தில் இருந்து சென்றவர்கள் கூறியபோது ஏற்பட்ட கைகலப்பில் கிருஸ்தவர்கள் நான்கு பேரும் இந்துக்கள் இருவருமாக மொத்தம் ஆறுபேர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவிரவிடம் வினவிய போது கிருஸ்தவ ஆலயம் பதிவு செய்யப்படாமல் இந்து ஆலயத்திற்கு அருகில் இயங்கி வந்ததால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து அறிய முடிகின்றது. கிருஸ்தவ திருச்சபையில் ஒலிபெருக்கி பாவிப்பதற்கான அனுமதி பெறப்படவில்லை என்று தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .