2026 மே 09, சனிக்கிழமை

dd

மையவாடிக் காணி விவகாரம்; நகரசபை உறுப்பினர்களுக்கு அழைப்பாணை

Suganthini Ratnam   / 2013 ஜூன் 16 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சொந்தமானது எனத் தெரிவிக்கப்படும் மையவாடிக் காணிப்  பிரச்சினை தொடர்பான வழக்கு தொடர்பில் காத்தான்குடி நகர சபையின் அனைத்து உறுப்பினர்களையும் எதிர்வரும் 18ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 11ஆம் திகதி காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சொந்தமானது எனத் தெரிவிக்கப்படும் காத்தான்குடி 6ஆம் குறிச்சி பிரதான வீதியில் உள்ள மையவாடிக் காணியில் காத்தான்குடி நகர சபையினால் கட்டிடம் ஒன்று கட்டுவதற்காக வேலி அடைக்க முற்பட்டபோது அங்கு கலவரம் ஏற்பட்டிருந்தது.

காத்தான்குடி நகரசபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இந்த அழைப்பாணையை அனுப்பி வைத்துள்ளதாக காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதிவாளரினால் காத்தான்குடி நகர சபைத் தலைவர் மற்றும் பிரதித் தலைவர் உட்பட 7 உறுப்பினர்களுக்கு நேற்று சனிக்கிழமை இந்த அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .