2026 மே 09, சனிக்கிழமை

dd

மரக்கிளை முறிந்ததில் சிறுவன் படுகாயம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 17 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

மா மரத்தில் ஏறி மாங்காய் பறித்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மரக்கிளை முறிந்ததில் நிலத்தில் விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கதிரவெளி பிரதேசத்திலேயே நேற்றுமுன்தினம் சனி;க்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கதிரவெளி காளி கோயில் வீதியைச் சேர்ந்த மூன்றாம் தரத்தில் கல்வி கற்கும் துரைநாயகம் கமலகாந்தன் (வயது 8) என்ற சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

உறவினர் ஒருவரின் வீட்டு வளவில் நின்ற மா மரத்தில் தனது மகன் ஏறி மாங்காய் பறித்துவிட்டு கீழிறங்கும்போது பட்டுப்போன மரக்கிளையைப் பற்றிப் பிடித்துள்ளார். அது முறிந்து கீழே விழுந்தபோது தனது மகனும் விழுந்து படுகாயமடைந்துள்ளதாக இந்தச் சிறுவனின் தாய் தெரிவித்தார்.

இந்தச் சிறுவன் மயக்கமடைந்த நிலையில் உடனடியாக கதிரவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தாய் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .