2026 மே 09, சனிக்கிழமை

கோவில்களை பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 17 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ரீ.எல்.ஜவ்பர்கான்


இந்துக் கோவில்களை பாதுகாக்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மட்டக்களப்பு ஜி.வி.வைத்தியசாலைக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற  இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் முக்கியஸ்தர்கள் பலர்  கலந்து கொண்டனர்.
'
கல்நெஞ்சம் படைத்தவர்கள்தான் விக்கிரகங்களை உடைப்பார்கள்', 'இறைவனின் பிரதி விம்பம் விக்கிரகங்கள் ஆகும்', 'பாதுகாப்போம் பாதுகாப்போம் ஆலயங்களை பாதுகாப்போம்', 'விக்கிரகங்களை உடைத்து வீணாக அழிந்து போகாதே' போன்ற  வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .