2026 மே 09, சனிக்கிழமை

dd

அசாத்சாலி கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்

Menaka Mookandi   / 2013 ஜூன் 17 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளரும் முன்னாள் கொழும்பு மாநர பிரதி மேயருமான அசாத் சாலி, இம்மாத இறுதியில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட பின் முதன்முறையாக கிழக்கு மாகாணத்திற்கு இவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

இந்நிலையில், 28ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கும் 29ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் 30ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதாக அசாத்சாலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடியிலும் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருதிலும் திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியாவிலும் பொதுக்கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .