2026 மே 09, சனிக்கிழமை

dd

நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் திறப்பு

Kogilavani   / 2013 ஜூன் 17 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முதலாக மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்நூலகத்தை கிழக்குப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர உத்தியோகப்பூர்வமாக திறந்துவைத்தார்.

மாவட்ட பொலிஸாரினது நன்மை கருதி இந்நூலகம் திறந்துவைக்கப்பட்டது.

பொலிஸ், நீதி, நிர்வாகம், போக்குவரத்து சட்டங்கள் உட்பட பல்துறை சார் நூல்கள் இந்நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகள், பொறுப்பதிகாரிகள், தலைமைப் பொலிஸ் நிலைய பொலிஸார் மற்றும் ஊழியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .