2026 மே 09, சனிக்கிழமை

சமுர்த்தி மகா சங்க கட்டிடத் திறப்பு விழா

Suganthini Ratnam   / 2013 ஜூன் 18 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்க புதிய கட்டிடத் திறப்பு விழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்த சமுர்த்தி மகா சங்கக் கட்டிடமானது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் சமுர்த்தி அதிகார சபையின் நிதியுதவியில் 2 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டது.

மேலும், சிப்தொர புலமைப்பரிசில் மற்றும்  சிசுதிரிய புலமைப்பரிசில், சமுர்த்தி சுழற்சிமுறைக் கடன் திட்டம், போஷாக்குப் பொதிகள் ஆகியனவும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

30 மாணவர்களுக்கு சிப்தொர புலமைப்பரிசில் திட்டம் வழங்கப்பட்டன. இத்திட்டத்தில்  ஒவ்வொரு மாணவனுக்கும் மாதாந்தம் 1,000 ரூபா படி 9 மாதங்களுக்குரிய கொடுப்பனவாக  9,000 ரூபா வழங்கப்பட்டன.

20 மாணவர்களுக்கு சிசுதிரிய புலமைப்பரிசில் திட்டம் வழங்கப்பட்டன. இத்திட்டத்தில் ஒவ்வொரு மாணவனுக்கும் 300 ரூபா படி 6 மாதங்களுக்குரிய கொடுப்பனவாக 1,800 ரூபா வழங்கப்பட்டன. 

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 500 ரூபா பெறுமதியான போஷாக்குப் பொதிகள் 200 தாய்மார்களுக்கு வழங்கப்பட்டன.

சமுர்த்தி சுழற்சிமுறைக் கடன் திட்டத்தில் 20 பேருக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

சமுர்த்தி மகா சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஏ.பஸீர் தலைமையில்  இதற்கான நிகழ்வு நடைபெற்றது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .