2026 மே 09, சனிக்கிழமை

போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 18 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை கிராமத்தில் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கான வேலைத்திட்டமொன்று நேற்று திங்கட்கிழமையிலிருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

'போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்போம்' என்ற தொனிப்பொருளில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிறைந்துரைச்சேனை நூரியா ஜூம்ஆ பள்ளிவாசல், பறகத் பள்ளிவாசல், பதுரியா பள்ளிவாசல், ஹூதா பள்ளிவாசல் நிர்வாகிகள், வாழைச்சேனை வர்த்தக சங்க உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்புக்குழுப் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள், கிராம அலுவலக அதிகாரிகள் ஆகியோர் ஒன்றிணைந்து இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் பிறைந்துரைச்சேனை பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம் செய்பவர்கள், போதைப்பொருள் பாவனையாளர்களென்று அடையாளம் காணப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் தீமைகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .