2026 மே 09, சனிக்கிழமை

dd

கௌரவிப்பு நிகழ்வும் நூல் வெளியீடும்

Kogilavani   / 2013 ஜூன் 18 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


முன்னாள் இந்துக்கலாசார அமைச்சர் கலாநிதி செல்லையா இராஜதுரை கௌரவிப்பு விழாவும் 'பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நூல் வெளியீட்டு விழாவும் மட்டக்களப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில், இராஜதுரை நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் சிறிலங்கா சுதந்திரக் ட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான அருண்தம்பிமுத்து, மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை, சர்வ மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், கல்விமான்கள், பொது மக்கள் பணியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத் பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.கருணாகரம்(ஜனா)ஆகியோரால் கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் சிவயோகச்செல்வன் சாம்பசிவம் குருக்கள் அவர்களினால் இயற்றப்பட்ட வாழ்த்துப்பா நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனால் வழங்கிவைக்கப்பட்டது.

விசேட நிகழ்வாக அமைச்சர் இராதுரை 1954ஆம் ஆண்டு மட்டக்களப்பு வின்சன்ற் பெண்கள் கல்லூரி தமிழ் மன்றத்தில் 'பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் என்ற தலைப்பில் நிகழ்த்திய விரிவுரை' நூலாக அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இராஜதுரை 1956ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

தொடர்ந்து 1960, 1961, 1965, 1970, 1977ஆம் ஆண்டுகளிலும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இந்து கலாசார, பிரதேச அபிவிருத்தி அமைச்சராகவும், மலேசியா நாட்டின் இலங்கைத் தூதுவராகவும் கடமையாற்றியுள்ளார்.

தமிழ் பேசும் சமூகத்தின் மத்தியில் அதிக காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து சாதனை படைத்தவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவருமான மட்டக்களப்பு மண்ணின் மைந்தன் கலாநிதி இராஜதுரை கௌரவிக்கப்பட்டார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .