2026 மே 09, சனிக்கிழமை

தூய பசும்பால் நுகர்வினை ஊக்குவிக்கும் செயற்திட்டம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2013 ஜூன் 18 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


வாகரைப் பிரதேசத்தில் தூய பசும்பால் நுகர்வினை ஊக்குவிக்கும் முதலாவது செயற்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாங்கேணி தெற்கு றோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது, மாங்கேணி தெற்குப் பிரதேச கிராமத்தவர்கள், பாடசாலை மாணவரகள், ஆசிரியர்கள் உட்பட சுமார் 500 பேருக்கு உள்நாட்டுப் பண்ணைகளிலிருந்து பெறப்பட்டு காய்ச்சப்பட்ட தூய பசும்பால் வழங்கப்பட்டது.

கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாகரைப் பிரிவு கால்நடை வைத்தியர் ஆர்.டி.எம்.எச்.மதுமாலா, கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.எம்.ரமீஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

'நாட்டின் உள்நாட்டு வளங்களை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கு நமது பசுக்களிலிருந்து பெறப்படும் தூய பால் பெருந்துணை புரியும்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவை நுகர்வதால் உள்நாட்டுப் பொருளாதாரம் கேள்விக்குறியாவதோடு இளம் சந்ததி நோயாளிகளாக நேரிடுகின்றது.

இதனைத் தவிர்ப்பதற்காக இந்த தூய பசும்பால் நுகர்வினை ஊக்குவிக்கும் செயற்திட்டம்; ஆரம்பித்து வைக்கப்படுகின்றது' என நிகழ்வில் உரையாற்றிய வாகரைப் பிரிவு கால்நடை வைத்தியர் ஆர்.டி.எம்.எச்.மதுமாலா தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .