2026 மே 09, சனிக்கிழமை

வாகரை பொலிஸ் நிலையத்தில் நூலகம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 20 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் நிலையத்தில் முதன்முறையாக நூலகம் ஒன்று நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

வாகரை பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்த களனி பல்கலைக்கழக நூலக மற்றும் விஞ்ஞானக் கற்கைநெறி மாணவர்களும் விரிவுரையாளர்களும் இந்த நூலகத்திற்கு ஒருதொகுதிப் புத்தகங்களையும் அன்பளிப்புச் செய்தனர்.

இந்த நிகழ்வில் களனி; பல்கலைக்கழகத்தின் நூலக மற்றும் விஞ்ஞானக் கற்கைநெறி பிரிவின் பீடாதிபதியும் பேராசிரியருமான டிகிரி ஹேரத் குணதிலக்க, களனி; பல்கலைக்கழகத்தின் நூலக மற்றும் விஞ்ஞானக் கற்கைநெறி பிரிவின் முன்னாள் தலைவரும் பேராசிரியருமான டபிள்யூ.ஏ.வீரசூரிய  மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும் களனி பல்கலைக்கழக நூலக மற்றும் விஞ்ஞானக் கற்கை பட்டப்படிப்புக்கள் பிரிவின் பேராசிரியருமான எச்.எம்குணரெத்ன பண்டா, வாகரை பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவுப் பொறுப்பதிகாரி ஜீ.டபிள்யூ.எம்.நிமேஷக் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

இந்த நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட நூல்கள் வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாருக்கும் இங்கு தடுத்து வைக்கப்படும் கைதிகளுக்கும் அறிவைப் பெற்றுக்கொள்ள பெருந்துணை புரியும் என களனி பல்கலைக்கழகத்தின் நூலக மற்றும் விஞ்ஞானக் கற்கைகள் பிரிவின் முன்னாள் தலைவரும் பேராசிரியருமான டபிள்யூ.ஏ.வீரசூரிய உரையாற்றும்போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .