2026 மே 09, சனிக்கிழமை

dd

தேசிய உணவுக் கலாசார மேம்பாட்டுத்திட்ட நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூன் 20 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்


தேசிய உணவுக் கலாசார மேம்பாட்டுத்திட்ட வைபவம் இன்று மட்டக்களப்ப மாநகர சபை நகர மண்டபத்தில் நடைபெற்றது.
கலாசார அலுவலகள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து இந்த வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் வி.வாசுதேவன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் உட்பட பிரதேச செயலாளர்கள்,  அதிகாரிகள்,  திணைக்கள தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பாரம்பரி கலாசார உணவு முறை தொடர்பாக முன்னாள் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் செல்வி தங்கேஸ்வரி மற்றும் திருமதி ராதா ஞானரத்தினம், ஜுனைதா சரீப் ஆகியோர் கருத்துரைகளும் வழங்கினர்.

இதேவேளை, இந்நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன் பாரம்பரிய உணவுகளும் இங்கு வைக்கப்பட்டிருந்தன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .