2026 மே 09, சனிக்கிழமை

dd

புகை கக்கும் வாகனங்களால் மக்கள் அவதி

Kogilavani   / 2013 ஜூன் 20 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் புகை கக்கும் வாகனங்கள் அதிகரித்துள்ளதால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதி, மட்டக்களப்பு—பொலநறுவை பிரதான வீதிகளில் இத்தகைய வாகனங்கள் அதிகளவில் சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிகளவிலான புகையினை கக்கிக்கொண்டு வாகனங்கள் செல்வதால் வாகனங்களில் பின்னால் பயணிப்போர் குறித்த நச்சுப்புகையினை சுவாசிக்க வேண்டியுள்ளதாகவும் இதனால் பல்வேறு நோய்களை எதிர்கொள்ள நேரிடுவதாகவும் பாதசாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து டிப்போக்களுக்கு சொந்தமான பஸ்கள் கூட இத்தயை நிலையில் காணப்படுவாதக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இவற்றை தடுக்க மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முன்வரவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கினறனர்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட மோட்டார் போக்குவரத்து பரிசோதகர் யு.எல்.ஏ.வஹாபிடம் கேட்டபோது, 'இவ்வாறான வாகனங்களை கண்டுபிடிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். மாதாந்தம் பல முற்றுகைகளை நடாத்தி வாகனங்களை கண்டுபிடித்துள்ளோம்' என தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .