2026 மே 09, சனிக்கிழமை

கஜுவத்தையில் நெல் களஞ்சியசாலை

Suganthini Ratnam   / 2013 ஜூன் 20 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கஜுவத்தையில் அப்பிரதேச விவசாயிகளின் நன்மை கருதி நெல் கொள்வனவு களஞ்சியசாலையொன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

'திவிநெகும' திட்டத்தின் கீழ், ஒரு கோடியே 60 இலட்சம் ரூபா செலவில் இந்நெல் கொள்வனவு களஞ்சியசாலை  அமைக்கப்பட்டு வருவதாக வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தெரிவித்தார்.

கதிரவெளி, வாகரை, மாங்கேணி, பனிச்சங்கேணி, மதுரங்கேணிக்குளம், குஞ்சங்குளம், ஆலங்குளம், இரண்டாம்கட்டை, கட்டுமுறிவு, தோணிதாட்டமடு, புச்சாக்கேணி, அம்பந்தனாவெளி, கிரிமிச்சை, காரமுனை, காயான்கேணி ஆகிய பிரதேச வயல் நிலங்களில் விளையும் நெல்லை அரசாங்க கட்டுப்பாட்டு விலையில்; கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும் இந்நெல் களஞ்சியசாலை உதவுமெனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .