2026 மே 09, சனிக்கிழமை

dd

கடையும் ஆட்டோவும் தீக்கிரை

Suganthini Ratnam   / 2013 ஜூன் 21 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் கிராமச் சந்தியிலுள்ள பலசரக்குக் கடையுடன் கூடிய ஹோட்டலொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இப்பலசரக்கு கடையுடன் கூடிய ஹோட்டலும் முச்சக்கரவண்டியும் நேற்று வியாழக்கிழமை இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸில் கடை உரிமையாளர்; இன்று வெள்ளிக்கிழமை காலை முறைப்பாடு செய்துள்ளார்.

தனது கடையுடன் கூடிய ஹோட்டலிருந்த  பொருட்களும் கடையினுள்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

வழமைபோன்று இன்று வெள்ளிக்கிழமை பெரிய தொழுகைக்காக தான் நேற்று வியாழக்கிழமை இரவு கடையுடன் கூடிய ஹோட்டலை மூடிவிட்டு ஏறாவூருக்கு வந்தபோது, தனது கடையுடன் ஹோட்டல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதென்று தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக கரடியனாறு பொலிஸில் கடை உரிமையாளரான சீனி முஹம்மது பரீட் தெரிவித்தார்.

முச்சக்கரவண்டியுடன்  கடையிலிருந்த பொருட்களுடன் சேர்த்து 500,000 ரூபாவுக்கு அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் கரடியனாறு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .