2026 மே 09, சனிக்கிழமை

கிழக்குப் பல்கலை முதலாம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள் முதலாம் திகதி ஆரம்பம்

Kogilavani   / 2013 ஜூன் 21 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்குப் பல்கலைக்கழக 2011/ 2012 ஆம் கல்வியாண்டு  முதலாம் வருட மாணவர்களுக்கான பலக்லைக்கழக விரிவுரைகள் எதிர்வரும் 1 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

விவசாய பீடம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீடங்களுக்கு அனுமதிக்கப்படடுள்ள 1ஆம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகளே எதிர்வரும்  1.7.2013ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

விவசாய பீடம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீடங்களை சேர்ந்த விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ள மேற்படி பீடத்தினைச் சார்ந்த மாணவர்கள் தத்தமது விடுதிகளுக்கு தங்களது பீடங்களின் விரிவுரைகள் ஆரம்பமாகும் திகதிக்கு முதல்நாள் (30.06.2013) அன்று பி.ப 5 மணிக்கு முன்னர் கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, செங்கலடி எனும் விலாசத்திற்கு சமூகமளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

ஏனைய பீடங்களுக்கான மாணவர்களுக்கு விரிவுரைகள் ஆரம்பமாகும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பதிவாளர் மேலும் அறிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .