2026 மே 09, சனிக்கிழமை

சிசுவின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 21 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விபுலானந்தபுரம் கிராமத்திலுள்ள கிணறொன்றிலிருந்து 10 மாதங்களேயான ஆண் குழந்தையொன்றின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் மீட்கப்பட்டுள்ள இச்சடலம், ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

குழந்தையை தான் தொட்டிலில் உறங்க வைத்துவிட்டு வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டிருந்ததாகவும்  பின்னர் பார்த்தபோது தனது குழந்தை காணாமல் போயுள்ளது.   இந்நிலையில், தனது குழந்தையை தேடியபோது வேறொரு வளவிலிருந்த கிணற்றில் குழந்தை சடலமாகக் காணப்பட்டதாகவும் இக்குழந்தையின் தாய் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .