2026 மே 09, சனிக்கிழமை

dd

இருமல் மருந்து எடுத்துசென்றவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2013 ஜூன் 21 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

இருமலுக்கு பயன்படுத்தப்படும் மருந்தை வைத்திருந்தவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம்.றிஸ்வி உத்தரவிட்டுள்ளார்.

வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் குறித்த சந்தேநபர் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸின் விசேட குழுவினர் பிறைந்துரைச்சேனைப் பகுதியில் நேற்று இரவுக் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் சந்தேகத்திற்கிடமான ஒருவர் கொண்டு வந்த பொதியை சோதனையிட்டனர்.

அந்த பொதியிலிருந்து இருமலுக்கு பயன்படுத்தப்படும் மருந்து போத்தல்கள் ஐந்து மீட்கப்பட்டதுடன் குறித்த நபரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டவர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியபோதே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இருமலுக்கு பயன்படுத்தப்படும் மருந்தை போதைவஸ்துக்காக இளைஞர்கள் பாவிப்பதால் மருத்துவரின் மருந்து சிட்டை இல்லாமல் மருந்தகங்களில் குறித்த இருமல் மருந்து விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .