2026 மே 09, சனிக்கிழமை

உல்லாசப்பயணத்துறை வளர்ச்சிக்கு கிழக்கு மாகாணம் பெரும் பங்காற்றுகிறது: பசில்

A.P.Mathan   / 2013 ஜூன் 22 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்
 
இலங்கையின் உல்லாசப்பயணத்துறை வளர்ச்சிக்கு கிழக்கு மாகாணம் பாரிய பங்களிப்புச் செய்கிறது. சகல வளங்களும் நிறைந்த இம்மாகாணம் இலங்கையின் பெரும் இயற்கைச் சொத்தாகும் என பொருளாதார அபிவித்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் ஈஸ்ட் லகூன் நட்சத்திர விடுதி திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
 
தொடர்ந்து பேசிய அவர், கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களைவிட சிறப்புமிக்கது. அதேநேரம் கிழக்கு ஏனைய மாகாணங்களின் இணைப்பு பாலமாக செயற்படுகின்றது. ஊவா, மத்திய, வடக்கு, வடமேல், வடமத்திய மாகனாணங்களுடன் மிக இலேசான இணைப்பை கொண்டுள்ளது.
 
இத்தகைய உல்லாச பயணிகளை கவரும் ஹோட்டல்கள் எமது நாட்டிற்குப் பெருமை சேர்ப்பவைகள். மட்டக்கள்பு மண்ணில் இவ்வாறு செல்வராஜா போன்றவர்கள் இத்தகைய நட்சத்திர ஹோட்டல்களைத் திறப்பதால் நமது நாட்டு சுற்றுலாத்துறை வளர்ச்சியடைகின்றது.
 
எதிர்காலத்திலும் இத்தகை சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டங்களுக்கு எமது அமைச்சு நிச்சயம் உதவிபுரிய காத்திருக்கிறது என்றார்.
 
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட சிவில் சமுக தலைவர் எம்.மாமாங்கராஜா உட்பட பலர் இந்நிகழ்வில் உரை நிகழ்த்தினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .