2026 மே 09, சனிக்கிழமை

மட்டக்களப்பில் புதிதாக தொழுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்: மனோகரன்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 23 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் புதிய தொழு நோயாளர்கள் இனங்கானப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொதுச்சுகாதார பரிசோதகர் பி.மனோகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணி;ப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தொழு நோய் தொடர்பான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலகத்தில் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர், டாக்டர் எம்.சதுர்முகத்தின்  ஆலாசனையின் பேரிலும் வழிகாட்டலிலும் மட்டக்களப்பு மாவட்;டத்திலுள்ள சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண்கள் சாரணிய ஆசிரியைகள் ஆகியோருக்கு தொழு நோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நடத்தப்பட்டது.

இந்தச் செயலமர்வில் பொதுச்சுகாதார பரிசோதகர் பி.மனோகரன் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மற்றும் ஆரையம்பதி, ஏறாவூர்,  செங்கலடி, காத்தான்குடி, வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் புதிய தொழு நோயாளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் கடந்த மே மாதம் வரை 72 தொழு நோயாளர்கள் புதிதாக இனம் காணப்பட்டுள்ளனர்.

புள்ளிவிபரங்களின் படி மட்டக்களப்பில் 22 தொழு நோயாளர்களும் ஏறாவூரில் 12 தொழு நோயாளர்களும் செங்கலடியில் 10 தொழு நோயாளர்களும் காத்தான்குடியில் 7 தொழு நோயாளர்களும்  வாழைச்ண்னை மற்றும் பட்டிருப்பு பிரதேசங்களில் தலா 8 தொழு நோயாளர்களும் ஆரையம்பதி மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேசங்களில் தலா 4 தொழு நோயாளர்களும் வவுணதீவு மற்றும் ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களில் தலா ஒரு தொழு நோயாளரும் இவ்வருடம் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் 152 தொழு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

தொழு நோய் தொற்றும் நோயாக இருந்தாலும் அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் பூரணமாக சிகிச்சை பெற்று குணப்படுத்த முடியும். தொழு நோயாளர்கள் பாவிகள் என்றும் அவர்கள் இறைவனினால் தண்டிக்கப்பட்டவர்கள் என்றலெ;லாம் கூறி அவர்களை பிரித்து வைக்கக்கூடாது.

ஏனைய நோய்களைப் போன்று இந்த தொழு நோயையும் குணப்படுத்த முடியும் என்று சமூக மட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  தொழு நோயை முற்றாக ஒழிப்பதற்கு சமூக மட்டத்திலுள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .