-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தினமும் மட்டக்களப்பு, காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படும் அதி சொகுசு பஸ் மீது தராசுப் படிக்கல்லால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஏறாவூர் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆறுமுகத்தான் குடியிருப்பில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
பொலன்னறுவை இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான இந்த அதிசொகுசு பஸ், தினமும் காத்தான்குடியிலிருந்து இரவு ஒன்பது மணிக்குப் புறப்படுகின்றது.
இந்த பஸ் வழமைபோன்று நேற்றிரவு காத்தான்குடியிலிருந்து கொழும்பை நோக்கிப் புறப்பட்டு பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தபோதே பஸ்ஸின் மீது ஆறுமுகத்தான் குடியிருப்பில் வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் காரணமாக பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும் பஸ்ஸின் சாரதிப் பக்கத்து கண்ணாடி சேதமடைந்துள்ளது. இதனால் பஸ்ஸின் குளிரூட்டி சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தனியார் சொகுசு பஸ்காரர்களுக்கும் இலங்கைப் போக்குவரத்து சபை பஸ் சேவைக்கும் இடைப்பட்ட போட்டியே காரணமே இத்தாக்குதலுக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.