2026 மே 09, சனிக்கிழமை

dd

'இலங்கை அரசு பல்கலைக்கழக முறைமை முகங்கொடுத்துள்ள சிக்கல்களும் சவால்களும்' கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 23 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்,ரீ.எல்.ஜவ்பர்கான்


'இலங்கை அரசுப் பல்கலைக்கழக முறைமை முகங்கொடுத்துள்ள சிக்கல்களும் சவால்களும்' எனும் நூல் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன், இந்த
தலைப்பில் கலந்துரையாடல் ஒன்றும்  இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கோப் இன் விடுதியில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின்போது  பல்கலைக்கழக முறைமைகள், அதன் நடைமுறைகள், சிக்கல்கள், சவால்கள், எதிர்காலத்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இந்நூலுக்குரிய ஆய்வுரையை இலங்கை திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நிகழ்த்தினார்.

கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை தலைவர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில்  திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி டிலபா விதாரண, ஹரிணி அமரசூரிய, களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் சந்திமா நிசங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழர் ஆசிரியர் சங்கம், மட்டக்களப்பு சிவில் சமூக ஒன்றியம், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், முகாமைத்துவ ஒன்றியம் என்பனவற்றின் பிரதிநிதிகளும், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில்  கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .