2026 மே 09, சனிக்கிழமை

dd

சிசுவின் சடலம் மீட்பு; சந்தேகத்தில் தாய் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூன் 24 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட  விபுலானந்தபுரம் கிராமத்தில் குழந்தை ஒன்றின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்தக் குழந்தையின் தாய் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை (23.06.2013) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விபுலானந்தபுரம் கிராமத்தில் உள்ள  கிணறு ஒன்றிலிருந்து 10 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்றின் சடலத்தை கடந்த வெள்ளிக்கிழமை ((21.06.2013) ஏறாவூர் பொலிஸார் மீட்டிருந்தனர்.

குழந்தையை தான் தொட்டிலில் உறங்க வைத்துவிட்டு வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டிருந்ததாகவும்  பின்னர் தனது குழந்தை காணாமல் போயுள்ளது.   இந்நிலையில், தனது குழந்தையை தேடிப் பார்த்தபோது வேறொரு வளவிலிருந்த கிணற்றில் குழந்தை சடலமாகக் காணப்பட்டதாகவும் இந்தக் குழந்தையின் தாய் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் கூறியதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் இந்தக் குழந்தையின் தாய் கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளதால்; அவரை தொடர்ந்து  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதின் பின்னர் கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .