2026 மே 09, சனிக்கிழமை

dd

பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

Kogilavani   / 2013 ஜூன் 24 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கல்லடி பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன் உட்பட திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கல்லடி பிரதேசத்தில் உள்ள அனைத்து பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்வி நிலை வளர்ச்சிக்கு தடையாகவுள்ள காரணிகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பில் சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .