2026 மே 09, சனிக்கிழமை

dd

'சுவாமி தந்திரதேவாவின் வாழ்க்கை நல்லதொரு உதாரணம்'

Kogilavani   / 2013 ஜூன் 24 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


'அமெரிக்கர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று சேவைகள் செய்ய வேண்டும் என்பதற்கு சுவாமி தந்திரதேவாவின் வாழ்க்கை நல்லதொரு உதாரணமாகும்' என அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரி மைக்கல் ஏர்வின் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள நாவற்குடா இந்து கலாசார நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் நடைபெற்ற சுவாமி தந்திரதேவாவின் 5ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'நான் சுவாமி தந்திரதேவர் பிறந்த மண்ணில் பிறந்தவன். இங்குள்ள பிரச்சினைகள் மற்றும் இங்கு வருகைதரும் வெளிநாட்டவர்கள் பற்றியும் பதிவெடுப்பதற்கு 1800ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஒரே ஒரு அமெரிக்கர் மாத்திரமே இருந்தார்.

ஆனால் இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை கண்காணிப்பதற்கு தற்போது நாம் பலர் இருக்கின்றோம். இது ஒரு அரசியல் சம்மந்தமான நிகழ்வு இல்லை.

இது ஒரு புனிதமான நிகழ்வு. தந்திரதேவா அவர்களின் வாழ்க்கை அமெரிக்கர்கள் பிற நாடுகளுக்குச் சென்று எவ்வாறு பொதுச் சேவையில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுதம் என்பதற்கு ஓர் உதாரணமாகும்.

இவர் 25 ஆண்டுகள் மக்கள் சேவைக்காக தமது வாழ்வை அர்ப்பணித்தவர். இவரை நினைவு கூறுவதற்கு இதைவிட சந்தர்ப்பம் அமையாது. இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய அனைவருக்கும் நன்றிகள்' என்று தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .