2026 மே 14, வியாழக்கிழமை

dd

கிழக்கு மாகாணத்தில் கால்நடை வளர்ப்பை அதிகரிக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 ஜூன் 24 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடை கைத்தொழில் அமைச்சினால் கிழக்கு மாகாணத்திலுள்ள விவசாய மற்றும் பண்ணையாளர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் கால்நடை வளர்ப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்பிரகாரம், காத்தான்குடியிலுள்ள கால்நடை வைத்திய அலுவலகம் மற்றும் காத்தான்குடி நெசவு கைத்தொழில் நிலையம் என்பவற்றுக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் முதற் தடவையாக விஜயம் செய்து காத்தான்குடி கால்நடை வைத்தியர் அலுவலகப் பிரிவிலுள்ள பண்ணையாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போரை சந்தித்து கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடல் காத்தான்குடி கால் நடை வைத்தியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் பண்ணையாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் பிரச்சினைகள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவைகள் என்பவற்றையும் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது அமைச்சர் மாடு வளர்ப்பில் ஈடுபடும் நான்கு பயணாளிகளுக்கு தலா ஒரு பயனாளிக்கு அவர்களின் மாட்டு கொட்டிலை அமைப்பதற்காக 35,000 ரூபாவும் ஆடுவளர்க்கும் கொட்டில் அமைப்பதற்காக ஒரு பயனாளிக்கு பத்தாயிரம் ரூபாவும் வழங்கி வைத்தார்.

இதன்போது அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட கால் நடை வைத்திய அதிகாரி, காத்தான்குடி கால்நடை வைத்திய அதிகாரி உட்பட அதிகாரிகள் முக்கியஸ்த்தர்கள் பயணாளிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து காத்தான்குடி நெசவு கைத்தொழில் நிலையத்திற்கு சென்ற அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் நிலையத்தை பார்வையிட்டதுடன் அதிகாரிகளிடம் இதன் நடவடிக்கை பயன்பாடு என்பவற்றையும் கேட்டறிந்து கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .