2026 மே 09, சனிக்கிழமை

யானையை வேறிடத்திற்கு கொண்டுசெல்லுமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2013 ஜூன் 24 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பிரதேசத்தில் உள்ள யானையை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கோ அல்லது யானைகள் சரணாலயத்திற்கு எடுத்துச் செல்வதற்கோ நடவடிக்கை எடுக்குமாறு அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னரும் தமது பிரதேசத்துக்குள் நுழைந்த குறித்த யானை 4 வீடுகளைச் சேதமாக்கியதுடன், நெல் உள்ளிட்ட  உணவுப் பொருள்களை உட்கொண்டுவிட்டுச் சென்றதாக இப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் யானைகளுக்கான பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டபோது காட்டுப்பகுதியினுள் சிக்கிக்கொண்ட யானையொன்று தொடர்ச்சியாக பழங்குடிமடு, காந்திநகர், பாவற்கொடிச்சேனை, கற்பகக்கேணி உள்ளிட்ட கிராமங்களினுள் புகுந்து சேதங்களை விளைவித்து வருகின்றது.

இந்த யானை தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்த நிலையில் இந்த யானையை  அவர்கள் விரட்டி விடுவதுடன், யானையை விரட்டுவதற்காக வெடிகளையும் தருகின்றார்கள். இவர்களின் உதவியினால் ஓரளவுக்குப் பிரச்சினைகள் குறைகின்றன. ஆனாலும் இந்த யானையை இப்பிரதேசத்திலிருந்து நிரந்தரமாக வெளியேற்றினால் மாத்திரமே நிரந்தரமான நிம்மதி கிடைக்குமெனவும் இப்பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.

பாவற்கொடிச்சேனை பிரதேசத்தில் இந்த யானையின் அட்டகாசத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை  மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் சென்று பார்வையிட்டார்.

யானையின் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை அமைத்துத் தருவதற்கோ அல்லது நட்டஈடு பெற்றுத் தருவதற்கோ நடவடிக்கை எடுக்குமாறு இவரிடம், இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .