2026 மே 09, சனிக்கிழமை

dd

இளைஞர் வீடமைப்பு திட்ட வீடு கையளிப்பு

Super User   / 2013 ஜூன் 24 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.சசிகுமார்
, ரீ.எல்.ஜவ்பர்கான்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் வீடமைப்பு திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று திறந்துவைக்கப்பட்டு பயணாளியிடம் கைளிக்கப்பட்டது.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூகினால் இந்த வீட்டு திட்டம் திறந்துவைக்கப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகளான ஏ.கமீர், திருமதி கலாராணி, காத்தான்குடி பிரதேச இளைஞா சேவைகள் அதிகாரி எம்.றம்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வழங்கப்பட்ட 125,000 ரூபா பணத்திணை கொண்டு மக்கள் பங்களிப்புடன் 8 இலட்சம் ரூபா செலவில் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 14 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணி;பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .