2026 மே 09, சனிக்கிழமை

dd

காத்தான்குடி நகர சபை தலைவருக்கு பிணை

Super User   / 2013 ஜூன் 24 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால ;இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும்  மைய்யவாடி காணிக்குள் கட்டிடம் கட்டுவதற்காக காத்தான்குடி நகர சபை குறித்த காணியினை அண்மையில் வேலி போட்டு அடைத்தது.

இது தொடர்பிலான வழக்கில் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் அனைவரையும் கடந்த 18ஆம் திகதி செவ்வாயக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.ஸியாத் ஆகிய இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் இவர்கள் இருவருக்கும்  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் பிடியானை பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை இவர்கள் இருவரும்  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் ஆஜராகினர். இதன்போது காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.சியாத் ஆகிய இருவரையம் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்தார்.

அத்துடன் எதிர்வரும் ஜுலை 2ஆம் திகதி வரை இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் திகதி காத்தான்குடி நகர சபை தலைவர் அஸ்பர்  ஜேர்மனிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .