2026 மே 09, சனிக்கிழமை

வாகன விபத்தில் பெண் பலி

Super User   / 2013 ஜூன் 24 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் நாவற்குடா பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நாவற்குடா பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது மகனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பிரத்தியேக வகுப்புக்காக சென்று கொண்டிருந்த போது நாவற்குடா பிள்ளையார் வோயிலுக்கு முன்பாக வைத்து மூதூரிலிருந்து கல்முனையை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் வண்டியொன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் மோட்டர் சைக்களில் பயணித்த நாவற்குடா பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான ஈஸ்வரராஜ் நாநேஸ்வரி எனும் பெண்  ஸ்த்தளத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவரது மகனான 10 வயதான தனுஜன் படுகாயமடைந்து ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .