2026 மே 09, சனிக்கிழமை

dd

சட்டவிரோத தேக்கு மரங்கள் மீட்பு

Super User   / 2013 ஜூன் 25 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், க.ருத்திரன்

உழவு இயந்திரமொன்றில் சட்டவிரோதமாக ஏற்றிவரப்பட்ட ஒரு தொகுதி பெறுமதி வாய்ந்த தேக்கு மரங்களை கரடியனாறு பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

மாட்டெரு மண்ணுக்குள் மறைத்து வைத்து உழவு இயந்திரத்தில் ஏற்றி கடத்தி வரப்பட்ட மரக்குற்றிகளையே கரடியனாறு பொலிஸார் கைப்பற்றினர்.

இந்த மரக்குற்றிகள் நேற்று அதிகாலை கைப்பற்றப்பட்டதாக கரடியனாறு பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி யூ.ஜீ. செனரத் தெரிவித்தார்.

குறித்த உழவு இயந்திரத்தை சோதiயிட்டபோது, அதன் பெட்டிக்குள் தேக்கு மரக் குற்றிகள் அடுக்கி வைக்கப்பட்டு அதன் மேல் பரப்பில் வைக்கோலும் மாட்டெருவும் ஏற்றப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

தகவல் ஒன்றின் அடிப்படையிலே இந்த மரக்குற்றிகள் கடத்தி வரப்படுவது குறித்து அறிந்திருந்து கைப்பற்றியதாகவும் சாரதி நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதாகவும் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி யூ.ஜீ. செனரத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .