2026 மே 09, சனிக்கிழமை

dd

கன்னன்குடா பாடசாலையில் அபிவிருத்திகளை மேற்கொள்வதாக உறுதியளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 25 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள கன்னன்குடா பாடசாலையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான அருண் தம்பிமுத்து உறுதியளித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான அருண் தம்பிமுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  வவுணதீவு பிரதேச இணைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான எட்வின் கிருஸ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்டர்) உள்ளிட்டோர்; வவுணதீவு பிரதேசத்துக்கு விஜயம் செய்து கன்னன்குடா பாடசாலைக்கும் நேற்று திங்கட்கிழமை சென்றனர்.

இதன்போதே கன்னன்குடா பாடசாலையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.

இப்பாடசாலையின் கணினிக்கூடம், மைதானம், பாடசாலைக் கட்டிடங்கள் அனைத்தையும் பார்வையிட்ட இவர்,  பாதிக்கப்பட்ட பாடசாலைக் கட்டிடமொன்றுக்குப் பதிலாக புதிய கட்டிடமொன்றை அமைத்துத் தருவதாகவும் விளையாட்டு மைதானத்தை புனரமைத்துத் தருவதாகவும் அப்பாடசாலை அதிபர் ஏ.குலேந்திரகுமாரிடம் உறுதியளித்துள்ளார். மேலும், 800 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையின் சகல அபிவிருத்தி வேலைகளுக்கும் உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்  உறுதியளித்தார்.

வவுணதீவு பிரதேசத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் போக்குவரத்து, கல்வி, விவசாயம் போன்ற விடயங்களை அபிவிருத்தி செய்யும் வகையில் செயற்படவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான அருண் தம்பிமுத்து மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .