2026 மே 09, சனிக்கிழமை

பொருளாதார ரீதியில் பின்தங்குகின்றமைக்கு சுயதொழில் மேற்கொள்ளாமையே: முரளிதரன்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 25 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


எமது மாவட்டம் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாவட்டமாகக் காணப்படுவதற்கு காரணம் அனைவரும் அரசாங்க தொழிலை பெறுவதற்கு முயற்சிக்கின்றார்களே தவிர, சுயதொழிலை மேற்கொள்ளுவதற்கு முன்வருவதில்லை. மேலும், இவை தொடர்பான விழிப்புணர்வுகளும் எம்மத்தியில் இல்லையென மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

சமுதாய மேம்பாட்டிற்கான தகவல் தொழில்நுட்ப அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, தன்னாமுனை மியானி மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'தொழில்நுட்பத்துறையில் பயிற்சி பெற்ற மாணவர்கள் சுயதொழிலை மேற்கொள்ள விரும்பினால் அதற்கான அனைத்துச் செயற்பாடுகளுக்கும் உதவி வழங்கப்படுவதுடன்,  வங்கிக்கடன் போன்ற ஏற்பாடுகளும் எமது அமைச்சினால் செய்து கொடுக்கப்படும். இப்பயிற்சிநெறியானது கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடாகும். இச்செயற்பாடுகள் எந்தவித இடையூறுகளுமின்றி முன்னெடுக்க அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள வேண்டும். இது போன்ற பயிற்சிநெறிகளை தொடர்ந்து நடத்த எனது ஆதரவு தொடர்ந்தும் இருக்கும்' என்றார்.

சமுதாய மேம்பாட்டிற்கான தகவல் தொழில்நுட்ப அமைப்பானது,  கிழக்கு மாகாண இளைஞர்களுக்காக தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் சுயதொழிலை மேற்கொள்ளுவதற்கான செயன்முறைப் பயிற்சியுடன் ஆலோசனைகளை வழங்கியதுடன், இச்செயற்றிட்டத்தை நிறைவு செய்தவர்களுக்கு  சான்றிதழ்களையும் வழங்கியது.

50 இளைஞர், யுவதிகள் இப்பயிற்சிநெறியில் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்வில் விநாயகமூர்த்தி முரளிதரன்,  கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பு அதிகாரி பேட்டி பெரேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0

  • ITASD Tuesday, 25 June 2013 06:08 AM

    அமைச்சா் அவா்களின் செயற்பாடுகள் மிகவும் வரவேற்கத்தக்கது. எமது மாவட்டத்தை முன்னேற்றுவதற்காக மிகவும் செயற்பட்டு வருகிறார். இவருக்கு நாம் பக்கபலமாக இருக்க வேண்டும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .