2026 மே 09, சனிக்கிழமை

dd

வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி

Kogilavani   / 2013 ஜூன் 25 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கடந்த திங்கட்கிழமை மாலை திடீர் விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மன்சூர், அங்குள்ள வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர், வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் ஊழியர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை உட்பட பல்வேறு தேவைகள் குறித்து அமைச்சரிடம் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜாபீர் உட்பட ஊழியர்கள் எடுத்துக் கூறினர்.

இதன்போதே வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் உறுதியளித்தார்.

அத்தோடு இந்த வைத்தியசாலையிலுள்ள அம்பியூலன்ஸ் வண்டிக்கு தேவையான மற்றுமொரு சாரதியையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் இங்கு அமைச்சர் தெரிவித்தார்.

இங்கு நடைபெற்ற கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீனும் கலந்துகொண்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .