2026 மே 09, சனிக்கிழமை

றெஜி கலாசார மண்டபம் திறப்பு

Kogilavani   / 2013 ஜூன் 25 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், தேவ அச்சுதன்
, ரி.எல்.ஜவ்ரப்கான்

மட்டக்களப்பு, கோறளைப்பற்று தெற்கு எல்லையில் 18 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள றெஜி கலாசார மண்டபத்தினை ஜனாதிபதியின் ஆலாசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் திறந்து வைத்தார்.

கோறளைப்பற்று தெற்கு பிரதேச சபையின் செயலாளர் எம்.சிகாப்தீன் தலைமையில் கடந்த திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்த வைபவத்தில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் கே.தணபாலசிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிரான் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கலாசார மண்டபம் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக்கலாசார மண்டபத்திற்கு பெயரிடப்பட்ட றெஜி என்பவர் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரனின் சகோதரர் என
தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .