2026 மே 09, சனிக்கிழமை

dd

விபத்தில் ஒருவர் பலி

Kanagaraj   / 2013 ஜூன் 25 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள கிராண்குளம் பிரதேசத்தில் இன்று மாலை 7.30 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவ்வீதியினால் துவிச்சக்கர வண்டியில் சென்ற  ஒருவர் மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கிச் சென்ற தனியார் பஸ் வண்டியொன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் துவிச்சக்கரவண்டியில் சென்றவர் ஸ்த்தளத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதில் உயிரிழந்தவர் கிராண்குளம் ஆர்.டி.எஸ்.வீதியில் வசித்து வரும் 56 வயதுடைய பூபாலப்பிள்ளை சின்னத்தம்பி என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .