2026 மே 09, சனிக்கிழமை

மட்டக்களப்பில் சோளம் அறுவடை விழா

Kogilavani   / 2013 ஜூன் 26 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரி.எல்.ஜவர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் சோளம் அறுவடை விழா நேற்று முன்தினம் ஏறாவூர் தைக்கா வீதியில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றிய கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன்,

"அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு மத்திய அமைச்சின் உதவியோடு சோளம் பயிர் செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களம் முலம் 200 ஏக்கர் நிலத்தில் சோளம் பயிர் செய்வதற்காக விதைகளை வழ்ங்கியதோடு போதிய ஆலோசனைகளையும் வழங்கியிருந்தது.

இதன்மூலம் விவசாயிகள் சோளம் பயிர்ச்செய்கையில் பாரிய வெற்றியை பெற்றுக்கொண்டனர்.

மேலும் உழுந்து, கௌபி, நிலக்கடலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகு இதர மரக்கறி வகைகளும் உற்பத்தி செய்வதற்காக சுமார் 750 ஏக்கருக்கு விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்டன' என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .