2026 மே 09, சனிக்கிழமை

சட்டவிரோதமாக மண் ஏற்றிய மூவருக்கு பிணை

Super User   / 2013 ஜூன் 27 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றிய குற்றத்தில் மூன்று உழவு இயந்திரங்களுடன் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி பிணையில் விடுதலை செய்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாகனேரி – சன்டியனாறு வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றிய குற்றத்தின் பேரில் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் வாழைச்சேனை நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தியதற்கிணங்க அவர்களை விசாரித்த நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி ஒவ்வொருவருக்கும் தலா ஐயாயிரம் ரூபா காசுப் பிணையிலும் ஒரு லட்சம் ரூபா சரிரப் பிணையிலும் விடுதலை செய்துள்ளார்.

வாகனேரி – சன்டியனாறு வயல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே மண் ஏற்றிய மூன்று உழவு இயந்திரங்களும் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .