2026 மே 09, சனிக்கிழமை

விளையாட்டு மைதான வேலி இனந்தெரியாதோரால் சேதம்

Super User   / 2013 ஜூன் 27 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

ஆரையம்பதி விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதி வேலி இனந்தெரியாத நபர்களினால் நேற்று புதன்கிழமை சேதமாக்கப்பட்டுள்ளது.

ஆரையம்பதி மண்முனைப்பற்றுப் பிரதேச சபையினால் இளைஞர்களின் நன்மை கருதி விளையாட்டு மைதானத்தை சுற்றி வேலி அமைக்கப்பட்டு மைதானம் புனரமைப்பு செய்யப்படுகின்றது. இந்த நிலையிலேயே வேலியின் ஒரு பகுதி நேற்று இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செயற்பாடானது பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விரும்பாத சிலரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி சி.ஜே..அருள்பிரகாசம் தெரிவித்தார்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .