2026 மே 09, சனிக்கிழமை

dd

வாழைச்சேனை தனியார் போக்குவரத்து சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 ஜூன் 27 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


க.ருத்திரன்


மட்டக்களப்பு, வாழைச்சேனை தனியார் போக்குவரத்து சங்க ஊழியர்கள் கடந்த செவ்வாய்கிழமை காலை முதல் நண்பகல் வரை கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

கடந்த சனிக்கிழமையன்று திருகோணமலைக்கான போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து ஊழியர்களினால் மட்டக்களப்பு பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்ட ஊழியர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தே இவ் கவனஈர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

தாங்கள் போக்குவரத்து கடமையில் ஈடுபடும் பகுதிகளில் நெடும்தூர பேருந்துகள் வழக்கத்திற்கு மாறாக குறுந்தூர பயணிகளை ஏற்றி இறக்கும் செயல்பாட்டில் ஈடுபடுவதாகவும் இதனால் தங்களது நாளந்த போக்குவரத்தில் இருந்து பெறப்படும் வருமானத்தில்  பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே இவ் கவனஈர்ப்பு போராட்டத்தினை பேத்தாழை, வாழைச்சேனை பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை மாவட்ட முகாமையாளர் உ.யுவநாதனிடம் தங்களது கோறிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை தனியார் போக்குவரத்து சங்க உறுப்பினர்கள் கையளித்தனர்;.
அம் மகஜரில்,

'நீண்ட தூரம் போக்குவரத்தில் செல்லும் பேருந்துகள் குறுந்தூரம் செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்வதனை தவீர்க்க வேண்டும்.

நீண்ட தூரம் செல்லும் பேருந்தில் அடியாட்கள் ஏற்றி வருகின்றனர். இவர்கள் எங்களுக்கு தாக்குதல் மேற்கொள்வதனை தவிர்க்கப்படவேண்டும்.

திருகோணமலையிலுள்ள உயர் அதிகாரிகள் பக்கச் சார்பாக நடந்துகொள்வது நிறுத்தப்படவேண்டும்.

மட்டக்களப்பில் உள்ள உயர் அதிகாரிகள் மூலமாகவே எங்களது பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்' போன்ற பல கோறிக்கைகள் மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்தன.

மேற்படி விடயங்களை நன்கு கேட்டறிந்து கொண்ட மாவட்ட முகாமையாளர் குறித்த பிரச்சினைகளை தமது உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தீர்ப்பதாக உறுதியளித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .