2026 மே 09, சனிக்கிழமை

பொதுபலசேனாவுக்கு ஹிஸ்புல்லா அழைப்பு

Super User   / 2013 ஜூன் 27 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பொதுபலசேனாவை காத்தான்குடிக்கு வருகை தருமாறு அழைப்புவிடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பொதுபலசேனாவை காத்தான்குடிக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கவுள்ளேன் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை கட்டிடத்தில் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற உதவிகள் வழங்கும் வைபவமொன்றில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்,

"இன்று முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு விமர்சனங்களை பொதுபலசேனா உள்ளிட்ட சிங்கள தீவிரவாத அமைப்புக்கள் முன்வைத்து வருகின்றன. இந்த வகையில் முஸ்லிம்களுடைய நிலையையும் முஸ்லிம்களின் மார்க்க கலாசார விழுமியங்களையும் காண்பிப்பதற்காகவும் முஸ்லிம்களின் உண்மையான நிலையை காண்பிப்பதற்காகவும் பொதுபலசேனாவை நான் காத்தான்குடிக்கு வருமாறு உத்தியோகபூர்வமாக பொதுபலசேனாவுக்கு அழைப்பு விடுக்கவுள்ளேன்.

அரபுக் கல்லூரிகளில் தீவிரவாதம் போதிக்கப்படுவதாகவும் இராணுவப் பயிற்சி நடைபெறுவதாகவும் பொதுபலசேனா அமைப்பு பிரச்சாரம் செய்து வருகின்றது. இலங்கையில் அதிகமாக முஸ்லிம்கள் செறிவாக வாழும் காத்தான்குடி நகருக்கு பொதுபலசேனா முக்கியஸ்த்தர்களை அழைத்து வந்து இங்குள்ள முஸ்லிம் அரபுக் கல்லூரிகளில் என்ன போதிக்கப்படுகின்றது இங்கு ஆயுதப் பயிற்சி இடம் பெறுகின்றதா அல்ல நற்போதனைகள் இடம்பெறுகின்றதா என்பதை காட்டுவதுடன் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரி மற்றும் காத்தான்குடியிலுள்ள அரபுக் கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்றும் காட்டவுள்ளேன்.

முஸ்லிம்களைப் பற்றி தவறான கருத்துக்களுடன் இவர்கள் இருக்கின்றனர். முஸ்லிம்களை பற்றிய பிழையான மனப்பதிவு இவர்களிடமுள்ளது. முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள், முஸ்லிம்களின் கலாசார விழுமியங்கள் என்பவற்றை இவர்களுக்கு காண்பிக்க வேண்டும் இதற்காக பொதுபலசேனாவை காத்தான்குடிக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கவுள்ளேன்.

பொதுபல சேனா அமைப்புக்கும் நமது உலமாக்களுக்கும் இடையில் சந்திப்புக்களை ஏற்படுத்தி அவர்கள் வைத்துள்ள விமர்சனங்களுக்கு நாம் சரியான அணுகுமுறையில் பதிலளிக்க வேண்டும். நமது நற்பண்புகளையும் நமது ஒழுக்க கலாசார விழுமியங்களையும் நாம் போதிக்கும் நற்பண்புகளையும் அவர்கள் விளங்கச் செய்வதுடன் முஸ்லிம்களைப் பற்றி புரிந்து கொள்ளவும் அவர்களுக்கு வழி செய்யப்படல் வேண்டும்.

மாறாக நாம் அவர்களை விமர்சித்து ஆர்ப்பாட்டங்களை செய்து பிரச்சினைகளை அதிகரித்துக் கொள்ளத்தேவையில்லை;. இன்னுமொரு மியன்மார் இங்கு உருவாவதை யாரும் அனுமதிக்கமுடியாது.நாம் இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள் கிழக்கு மாகாணத்தில் நமக்கு பௌத்த தீவிரவாதிகளினால் பிரச்சினையில்லாமல் இருக்கலாம்.

ஆனால் கிழக்குக்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்கள் அச்சத்துடனும் பீதியுடனும் வாழந்து வருகின்றனர். அவர்களை பாதுக்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கின்றது. பள்ளிவாயல்கள் கட்டுவதன் மூலம் இலங்கையை நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை. பள்ளிவாயல்களை அமைப்பதன் மூலம் இலங்கையை இஸ்லாமிய நாடாக மர்றறவுமில்லை.

நாளார்ந்தம் ஐந்து வேளையும் தொழுவதற்கு எங்களுக்கு பள்ளிவாயல்கள் அவசியம் தேவையாக உள்ளன. அதனால் நாங்கள் சனத்தொகை;கு ஏற்ப பள்ளிவாயல்களை அமைக்கின்றோம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் ஒரு தடவை நான் கூறியுள்ளேன்.

இலங்கை முஸ்லிம்களின் சன்மார்க்க ஸ்தாபனமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையே உள்ளது. முஸ்லிம்களை வழிநடாத்துவதிலும் அவர்களுக்கான சிறப்பான மாக்க வழிகாட்டல்களை மேற்கொள்வதிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை செயற்பட்டுவருகின்றது.

ஆனால் இந்த பொதுபலசேனா அமைப்பு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவையும் விமர்சிக்கின்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவையும் தாக்கிப் பேசுகின்றனர். முஸ்லிம் மக்களின் மார்க்க ஸ்த்தாபனம் என்பதையம் மறந்து ஒரு தனி;ப்பட்ட நிறுவனத்தை தாக்குவது போன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை தாக்குகின்றனர்.

முஸ்லிம்களின் வளர்ச்சி முஸ்லிம்களின்  பொருளாதார எழுச்சி கல்வி எழுச்சியையும் தாங்கிக் கொள்ளமுடியாதவர்கள்தான் இவ்வாறான விமர்சனங்களை முஸ்லிம் மீது வைக்கின்றனர். காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை கிழக்கு மாகாணத்திலேயே சிறப்பாக இயங்கும் உலமா சபையாகும். அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவுடன் இணைந்து காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.

எங்குமே ஏற்படாத பாரிய சவால்களுக்கு கடந்த காலங்களில் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை முகம் கொடுத்தது. இன்று இந்த சபை மிகவும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது"என்றார்.
 
இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் அப்துல்லா ஆலிம் றஹ்மானி ஹசரத், காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாசபை தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0

  • M.A.Abdul Rasheed Thursday, 27 June 2013 01:13 PM

    இது ஒரு நல்ல முயற்சி தான்... வாழ்த்துக்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .