2026 மே 09, சனிக்கிழமை

dd

பாரம்பரிய பிரம்புக் கைத்தொழிலை ஊக்குவிக்கும் முயற்சி

Kogilavani   / 2013 ஜூன் 27 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு – திருகோணமலை மாவட்டங்களின்  எல்லையிலுள்ள வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதாரத்தை தேடிக்கொள்வதற்கும் வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்கும் பாரம்பரிய பிரம்புக் கைத்தொழிலை ஊக்குவிக்கும் முயற்சியில் வேர்ள்ட் விஷன் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

வேர்ள்ட் விஷன் நிறுவனத்துடன் இணைந்து கிழக்கு மாகாண கிராமியக் கைத்தொழில் அமைச்சு மற்றும் பிரதேச செயலகம் என்பன கூட்டாக இந்தத் திட்டத்திற்கு உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெருகல் ஆற்றின் கரை நெடுகிலும் இயற்கையாகவே சிறு பிரம்புகள் வளர்ந்து கிடப்பதால் இந்த கங்கையின் கரையோரக் கிராமங்களில் வசிக்கும் வறுமையான மக்கள் இந்த உள்ளூர் இயற்கை வளங்களைத் தாராளமாகப் பயன்படுத்தி தமது ஜீவனோபாயத்திற்காக பிரம்புக் கைத்தொழிலை மேற்கொள்ள வழிவகை செய்துள்ளதாக வேர்ள்ட் விஷன் நிறுவன நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் கே.லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

இதற்கமைவாக, பிரம்புக் கைத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் நேற்று புதன்கிழமை வெருகல்-மாவடிச்சேனையில் பிரம்புக் கைத்தொழில் பயிற்சி நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

இன்றைய பிரம்புக் கைத்தொழில் பயிற்சி நிலையத் திறப்பு விழாவில் கிழக்கு மாகாண கிராமிய தொழிற்துறைத் திணைக்களத்தின் பணிப்பாளர் எல்.டி.  தென்னக்கோன், நிர்வாக உதவியாளர் ஏ.ஏ. ஜெலீல், இணைப்பதிகாரி கே.புலேந்திரன், நிர்வாக திட்டமிடல் உதவியாளர் எம்.பாலேந்திரன், பிரதேச செயலாளர் பி.தனேஸ்வரன்,  வேர்ள்ட் விஷன் பிரதேச முகாமையாளர் ஈ.பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுவதற்காக முதற்கட்டமாக வட்டவான், முத்துச்சேனை, மற்றும் மாவடிச்சேனை போன்ற இடங்களிலிருந்து சுமார் முப்பது யுவதிகள் திவிநெகும பயனாளிகள் பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .